வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (20:06 IST)

விஜய்சேதுபதிக்காக இணையும் இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்', 'இமைக்கா நொடிகள்', '96' ஆகிய மூன்று படங்களும் சூப்பர ஹிட் வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதி நடித்த 'தென்மேற்கு பருவக்காற்ற' மற்றும் தர்மதுரை படங்களை இயக்கிய சீனுராமசாமி இந்த படத்தை இயக்க முதன்முறையாக இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளனர்.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில்  இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளன