1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (18:20 IST)

'96 ' படம் பார்த்து தியேட்டர்ல மயங்கிடுவேன்னு பயந்துட்டேன்- வசந்தபாலன்

96 படம்   தன்னுடைய மனசுல இருக்கும் பாரத்தையெல்லாம் போக்கிருப்பதாக இயக்குநர் வசந்தபாலன் 96 படம் குறித்து பாராட்டி உள்ளார்.
 
அண்மையில் 96 படத்தை பார்த்து மெய்சிலிர்த்த இயக்குநர் வசந்தபாலன் வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இது தொடர்பாக வசந்த பாலன் கூறுகையில்,
 
"96 படம் அப்படியே என் மனசுக்குள்ளே உக்கார்ந்துக்கிச்சு. படம் முடிஞ்சதும் ஒரு ஃபுல் அடிச்ச மாதிரியான ஒரு உணர்வு. இந்தப் படம் தந்த தாக்கம் அப்படி. மெய்மறக்கச் செய்த படம் 96. அழகி படத்துக்குப் பிறகு நான் மெய்மறந்து பார்த்தபடம் இதுதான்.
 
சின்ன வயசுல எங்க தெருல ஒரு பொண்ணைப் பாத்து காதலிக்க ஆரம்பிச்சு, என்னோட காதலை அவகிட்ட சொல்லலாம்னு நினைக்கும்போது அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாயிருச்சு. கிட்டத்தட்ட 11 வருஷம் காத்திருந்தேன். ஒரு பொண்ணைத் தொடுறது ஒண்ணுமே இல்ல. அவளோட நினைவுகளை உள்ளே வைச்சுருக்கறதுதான் சந்தோஷம். அதை இந்தப் படம் அவ்ளோ யதார்த்தமா உணர்த்திருக்கு.
 
எல்லாப் படத்துலயும் பேசிக்கிட்டே இருக்கிற விஜய்சேதுபதி, இந்தப் படத்துல பேசாம இருக்கார். பக்பக் பக்பக்னு அவரோட இதயம் துடிச்சு மயங்கி விழுறது மாதிரி, நானும் தியேட்டர்ல மயங்கிவிழுந்துருவேனோன்னு பயந்துட்டேன். பிரேம்க்கு பாராட்டுகள்" இவ்வாறு வசந்தபாலன் பேசினார்.