1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 22 ஜனவரி 2015 (09:46 IST)

ஐ படம் பார்த்த ஒரு கவிஞரின் கவிதை விமர்சனம்

கவிஞர் மகுடேசுவரன் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். ஐ படம் பார்த்த பின் அந்த தாக்கத்தில் அவர் ஒரு கவிதை எழுதியுள்ளார். உங்களின் ஐ விமர்சனத்துடன் அது ஒத்துப் போகிறதா பாருங்கள்.
ஐகாரப் படம்காணச் சென்றேன்
அழுவாத குறையாக நின்றேன்... 
இடைவேளை வருமுன்னே 
எழுந்தோடி வெளிவந்து 
படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
 
சீனாவைக் காட்டிவிட்டால் ஆச்சா?
சீன்பண்ணும் திறனெல்லாம் போச்சா?
வீணாக மூன்றாண்டு 
இல்லாத பொல்லாத 
விளம்பரங்கள் செய்துவிட்டால் ஆச்சா?
 
படச்சுருளில் படம்பிடித்த படமாம் 
கண்ணொற்றிக் கொள்ளும்படி வருமாம்...
ஓரெழவும் வரவில்லை 
படச்சட்டம் தெளில்லை. 
நாராசப் பாட்டெல்லாம் தொல்லை...
 
பாய்ஸ் படத்துப் பாட்டுமுறை விட்டு
ஜீன்ஸ் படத்து செட்டிங்கை விட்டு 
நான்குவகைப் பாடல்கள் 
நான்குவகை அடிதடிகள் 
வெளியேவா புதிதாய்த்தா கற்று...
 
ஆலிவுட்டில் பின்னிசைக்க செலவு 
ஆகும்தொகை லட்சத்துக்கும் குறைவு...
கோலிகுண்டு வாங்குதற்கு
கோடிவரை செலவழித்தால் 
தமிழ்த்திரையை நம்பியோர்க்கு அழிவு.