1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (18:54 IST)

ரஜினி படத்தில் நடித்ததால் மார்க்கெட் இழந்தேன்- பிரபல நடிகை குற்றச்சாட்டு

பாபா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தபின்  தனக்கான  பட வாய்ப்புகள் குறைந்ததாக நடிகை மணீஷா கொய்ராலா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தி மற்றும் தமிழ்  சினிமாவில் கடந்த 290 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  மணீஷா கொய்ராலா.

இவர், ஷங்கர் இயக்கத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்த இந்தியன்-1 படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, கமலுடன் இணைந்து ஆளவந்தான், ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக முதல்வன், மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பாபா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பாலிவுட் படங்களில் நடித்தது போன்றே அவருக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு  சுரேஷ் கிருஸ்ணா இயக்கத்தில், ரஜினியுடன் நடித்த பாபா படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியாவில் தன் மார்க்கெட் முடிவுக்கு வந்ததாக மணீஷா கொய்ராலா கூறியுள்ளார்.

manisha

இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர்'' பாபா படத்தில் நடிக்கும் முன், தென்னிந்தியாவில், தமிழ், தெலுங்கு,  மலையாள சினிமாவில் பிஸியாக இருந்ததாகவும், பாபா படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தபின்  பட வாய்ப்புகள் குறைந்ததாகவும்'' கூறியுள்ளார்.