வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:51 IST)

காந்தாரா 2 வேலைகள் தொடக்கம்… ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்!

கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் “காந்தாரா 2 படத்துக்கான எழுத்துப் பணிகளை ரிஷப் ஷெட்டி தொடங்கியுள்ளார். ஜூன் மாதத்தில் ஷுட்டிங் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வோம்” எனக் கூறியுள்ளார்.