ரஜினியை திடீரென இல்லத்துக்கு வந்து சந்தித்த சாமியார்!
நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு பிரபல சாமியார் நமோ நாராயண சுவாமி சந்தித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உடல்நிலைக் காரணமாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இப்போது சென்னையில் உள்ள அவர் விரைவில் மனநல சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரபல சாமியார் நமோ நாராயண சுவாமி சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது ரஜினிக்கு சாமியார் மனதை அமைதிப்படுத்த ஸ்படிக மாலை அணிவித்து ஆசி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.