திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (18:17 IST)

கொரோன வைரஸில் இருந்து தப்பிக்க பெண்ணாக மாறிய கௌதம் கார்த்திக் - ஷாக்கிங் புகைப்படம்!

சர்வதேச தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் தீவிரமாக பரவி உலகம் முழுக்க உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிமனிதர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பிரபல நடிகரான கௌதம் கார்த்திக்  கொரானா வைரஸ் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிந்துகொண்டு "பாதுகாப்பாக இருங்கள்" அறிவுரை வழங்கி புகைப்படம் ஒன்றை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருக்கும் அவர் ஒரு பெண் போன்று நீளாமான முடி வைத்துக்கொண்டு மொழு மொழுவென முகத்தை வைத்திருக்கிறார். ஒரு நிமிடம் பார்த்தவுடனே இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து போன்று தோன்றுகிறார். இதனால் இணைய வாசிகள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.