வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (10:04 IST)

அஜித் சொன்ன பதில் ஆச்சர்யம் அளித்தது… நடிகர் ஜி எம் சுந்தர் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஜி எம் சுந்தர்.

கமலுடன் சத்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஜி எம் சுந்தர். ஆனால் 2000 களுக்கு பிறகு சினிமாவில் இருந்து அவருக்கு ஒரு இடைவெளி ஏற்பட்டது. பின்னர் அவர் விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு மண்டேலா, சார்பட்டா பரம்பரை மற்றும் மகாமுனி ஆகிய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்கள் கிடைத்தன. இப்போது அவர் அஜித்தோடு நடித்துள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் உடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் ‘நான் வலிமையில் அஜித்துடன் நடிக்கும் போது ‘உங்களோடு நடிப்பது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்’ எனக் கூறினேன். அதற்கு அவர் ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களை எப்படி ஒரு இயக்குனர் தேர்ந்தெடுத்து இருக்கிறாரோ அப்படிதான் என்னையும் இயக்குனர் தேர்ந்தெடுத்ததால் நானும் இங்கு இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.