செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:27 IST)

அஜித்தின் ‘விஸ்வாசம்’ இந்தி ரீமேக்கில் இந்த நடிகரா?

அஜித்தின் ‘விஸ்வாசம்’ இந்தி ரீமேக்கில் இந்த நடிகரா?
அஜித்தின் ‘விஸ்வாசம்’ இந்தி ரீமேக்கில் இந்த நடிகரா?
அஜித் நடித்த வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப் பட்டுள்ள நிலையில் தற்போது அவர் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய்குமார் ஆர்வம் காட்டி உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதேபோல் ‘விஸ்வாசம்’ ரீமேக்கில் நடிக்க அஜய்தேவ்கான் முயற்சி செய்து வருவதாகவும் இருவரில் ஒருவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழில் வெளியான ‘விஸ்வாசம்’ 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செது சூப்பர் ஹிட் படமான ‘விஸ்வாசம்’ இந்தி ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது அக்ஷய்குமார் அல்லது அஜய்தேவ்கானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
மேலும் இந்த  படத்தில் நாயகியாக நடிக்கவும் பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது