1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:19 IST)

ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிக்கும் "பிரண்ட்ஷிப்" புகைப்படம் இணையத்தில் வைரல்!

"பிரண்ட்ஷிப்" ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை வெளியிட்ட  ஹர்பஜன் சிங்!
 
முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக நடிக்கிறார்.
 
இப்படத்தில் லாஸ்லியா , ஹர்பஜன் , அர்ஜுன், காமெடி நடிகர் சதிஷ், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது படத்தின் ஹீரோ ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழனின் தாய்மடி கீழடி தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னைமடி!
எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த Summer நம்ம படம் பிரண்ட்ஷிப் வருது தளபதி தல படம் மாதிரி நீங்க கொண்டாடலாம்" என கூறி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்றை வெளியிட்டு மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.