வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (13:41 IST)

முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடி அந்த பிரபல நடிகை!

எந்த வித சினிமா பின்பலமுமின்றி தன் கடின உழைப்பால் சினிமாவுக்கு வந்து உச்ச நடிகர்களுக்கு டஃ ப் கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. 
 
குறுகிய காலத்தில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவைத்து கொண்ட விஜய் சேதுபதி அடுத்ததாக  எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரான  அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் புதுமடமொன்றில் கமிட்டாகியிருக்கிறார். 
 
இப்படத்தில்  அவருக்கு ஜோடியாக நடிகை  அமலாபால் முதல் முறையாக இணைந்து நடிக்க இருக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்கி இருக்கிறது. படத்தின் முதல் கட்சியை எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
 
சர்வதேச அளவிலான பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகவுள்ள இப்படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதையாக உருவாகவிருக்கிறது. விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.