மலேசியாவில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு
மலேசியாவில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த சென்றுள்ளனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பிரமாண்ட நட்சத்திரக் கலைவிழா நடைபெறயுள்ளது. மலேசியா சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா, நட்சத்திர கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. இதில் நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் அங்கிருந்து நேரடியாக மலேசியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் இவ்விழாவில் விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', விஷாலின் 'சண்டக்கோழி 2', 'இரும்புத்திரை' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் ஆகியவையும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.ஓ படத்தின் டீசர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.