ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா விஜயகாந்த்!

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (12:16 IST)
கடலூரில் நேற்று சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார்.
 
முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள்.
 
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் விஜயகாந்தை மாதிரி தைரியமாக களத்தில் இறங்கி மக்களுக்காக போராடக்கூடிய வீரராக வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும்.
 
மைக்கை பார்த்தாலே பயமாக இருக்கிறது, பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்கிறவங்க வீட்டில் இருக்க வேண்டியது தானே? ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவிட்டரில் ஆட்சி செய்ய முடியாது. உங்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
 
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இப்படி கடுமையாக விளாசித்தள்ளிய பிரேமலதா விஜயகாந்த் மீது ரஜினி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :