அன்றாட செலவுக்கு நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி

Last Updated: திங்கள், 16 ஜூலை 2018 (11:48 IST)
தமிழ் சினிமா பிரபலங்களின் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறி வரும் பாலியல் புகார்கள் தமிழ் சினிமா உலகினரை பெரும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும்   படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிரவைத்தார்.
இந்நிலையில் தற்போது செலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகை அடுத்து  தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து, அடுத்தடுத்து  ஒவ்வொருவரின் பெயராக வெளியிட்டு வருகிறார். இதனால் தன்னை திரையுலகினர் ஒதுக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
 
பட வாய்ப்புகள் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். செலவுக்கு பணம் இல்லை, உடலில் தெம்பு குறைகிறது இருப்பினும் நான்  தொடர்ந்து போராடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. இவரின் அரை நிர்வாண போராட்டம் நடத்திய பிறகு அவரை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்  தெரிவித்தாராம். இத்தனை கஷ்டங்களுக்கு இடையே தான் போராடி வருவதாகம், நான் விளம்பரம் தேட பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவதாக  கூறுகிறார்கள். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்தி தலைப்பில் இருப்பதற்காக யாராவது தனது வாழ்க்கையுடன் விளையாடுவார்களா என்று ஸ்ரீ ரெட்டி  கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :