சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக டி.ராஜேந்தர்

Last Updated: சனி, 14 ஜூலை 2018 (14:01 IST)
நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை சினிமா பிரபலங்கள் மீது வைத்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் பரபரப்பை கிளப்பிய இந்த  விவகாரம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படுக்கைக்கு பயன்படுத்தினர் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிரவைத்தார். தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அரை நிர்வாணப்  போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இவரது புகாரில் தெலுங்கு நடிகர் நானீ உட்பட பல இயக்குநர்கள் சிக்கினர்.
 
ஸ்ரீ ரெட்டியின் புகாரில் வாய்ப்பு தருவதாகக் கூறி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகர் டி.ராஜேந்திரர் நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக இப்படி ஒரு  அவப்பெயரை ஏற்க முடியவில்லை.

சமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில  மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீ ரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்,  அவர்களிடம் வாய் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :