1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (09:21 IST)

மும்முனை போட்டிக்கு தயாராகும் தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழக காங்கிரஸ் கட்சியே தோற்றுவிடும் அளவுக்கு கோஷ்டிச் சண்டையால் கலகலத்து போயிள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். தற்போது தலைவராக இருக்கும் கேயார் அணி ஒரு பக்கம். அவரது எதிரியான தாணு கோஷ்டி இன்னொரு பக்கம். 
வரும் ஜனவரி 25 சங்கத்துக்கு தேர்தல் நடக்கயிருப்பதால் ஆதரவு திரட்டும் வேலை ஜரூராக நடக்கிறது. தாணு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கேயார் அணி சார்பில் நாசரின் மனைவி கமீலா நாசர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மன்சூர் அலிகானும் போட்டியிடுகிறார்.
 
இதில் தனியாளாக களமிறங்கும் மன்சூர் அலிகான் அதிரடி அறிப்புகளை வெளியிட்டுள்ளார். 
 
திரைக்கு வராமல் 500 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி கிடக்கின்றன. என்னை தலைவராக்கினால் அந்த படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கி ரிலீசுக்கு ஏற்பாடு செய்வேன். 
 
நலிந்த தயாரிப்பாளர்கள் 50 பேரை தேர்வு செய்து அவர்கள் கூட்டாக படம் தயாரிக்க வைத்து அந்த படத்தில் விஷால் போன்ற பெரிய நடிகர்களை இலவசமாக நடிக்க வைப்பேன். அதில் வசூலாகும் பணத்தை 50 பேருக்கும் பிரித்து கொடுப்பேன். திருட்டு சி.டி.யை ஒழிக்க தெருவில் இறங்கி போராடுவேன். அதற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்று அதிரடிகளை வீசியிருக்கிறார்.