புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:44 IST)

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது பிரபல இளம் நடிகர் மரணம் !

பிரபல நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டுமான பிரபீஸ் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார். இந்தசம்பவம் சினிமாத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையான சினிமா  பிரபல நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டுமான பிரபீஸ் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு விழிப்புணர்வு ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் திடீரெனச் சரிந்து விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிக்சிசை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 44 ஆகும்.

இதுகுறித்து அவருடன் பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர், பிரபீஸ் தொண்டை வறட்சி என்று கூறி நீர் அருந்தினார். பின்னர் சுருண்டு விழுந்துவிட்டார் என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.