1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (09:36 IST)

போதையில் கார் ஓட்டி அபராதம் செலுத்திய ஜெய்

லேட்நைட் பார்ட்டியில் நன்றாக குடித்துவிட்டு தங்களின் சொகுசு காரை ரோட்டோரம் படுத்திருப்பவர்களின் மீது ஏற்றுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபமாக சென்னை போலீஸார் செம உஷார். டூ வீலர்களைவிட கார்களில் செல்பவர்களைதான் அதிகம் சோதனை செய்கிறார்கள். டூ வீலர் இடித்து யாரும் சாகப் போவதில்லை. ஆனால் கார்கள் அப்படியல்ல.
 
இரவு வாகன சோதனையில் அடிக்கடி விஐபிகள் சிக்குவதுண்டு. சமீபத்தில் மாட்டியவர் நடிகர் ஜெய். பார்ட்டி முடிந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தவரை போலீஸார் மடக்கினர். குடித்திருக்கிறார்களா என்பதை கண்டறியும் கருவியில் ஊதச் சொல்லியிருக்கிறார்கள். கருவி கரெக்டாக ஜெய் குடித்திருப்பதை காட்டியது.
 
இதற்குள் ரசிக கண்மணிகள் அவரை சூழ்ந்து கொள்ள, அவசரமாக அபராத ரசீதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து காரில் கிளம்பினார்.
 
குடித்துவிட்டு காரோட்டினால் அந்த காரை போலீஸார் பறிமுதல் செய்வதுதான் வழக்கம். குடித்தவர்களே மீண்டும் காரோட்டி செல்ல அனுமதிப்பதில்லை. அதுதான் சட்டம். ஜெய் விஷயத்தில் போலீஸார் சட்டத்தை தளர்த்தி அவர் ஓட்டி வந்த காரிலேயே அவரை செல்ல அனுமதித்தனர்.