1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (12:47 IST)

'கண்ணான கண்ணே' பாடல் நம்பர் 1 டிரண்டில் இருப்பது ஏன் தெரியுமா?

தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று இரவு 7.15 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று நம்பர் 1 டிரண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.


 
இசையமைப்பாளர் டி.இமானின் மெலோடி இசையில் தாமரை பாடல் வரிகளில் சித்ஸ்ரீராம் பாடிய இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரண்டில் உள்ளது. அதேபோல் யூடியூபிலும் இந்த பாடலை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டரில் #KannaanaKanney என்ற ஹேஷ்டேக் டிரண்டில் இருக்க இன்னுமொரு காரணமும் உள்ளது. 
 
அதாவது, மகள் மீது ஒரு தந்தை வைத்துள்ள பாசத்தை வெளிக்காட்டும் பாடலாக இந்த பாடல் அமைந்திருப்பதால் பெரும்பாலான தந்தைகள் தங்கள் மகள்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்து வருகின்றனர். அழகு தேவதைகளாக உள்ள மகள்களுடன் தந்தைகள் பதிவு செய்வதன் காரணமாகத்தான் இந்த ஹேஷ்டேக் டிரெண்டில் இருப்பதாக கருதப்படுகிறது.


 
'என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற 'உனக்கென்ன வேணும் சொல்லு' பாடலை அடுத்து மிகப்பெரிய ஹிட்டாகிய தந்தை-மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடல் மகளை வைத்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் ஒரு பொக்கிஷமான பாடலாகவே கருதப்படுகிறது.
 
இந்த பாடலுக்கு பல தந்தைமார்களும் தங்கள் மகள்களை பற்றிய உருக்கமான கருத்துக்களை யுடியூபில் பதிவிட்டு வருகின்றனர்.