திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (19:52 IST)

அமிதாப்புடன் இணைந்து பணிபுரியாதது வருத்தம் அளிக்கிறது… மனம் விட்டு சொன்ன இயக்குனர்!

பிரபல இயக்குனரான பிரியதர்ஷன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனோடு இணைந்து பணியாற்ற முடியாதது வருத்தம அளிப்பதாக சொல்லியுள்ளார்.

தமிழ் மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். இவர் விரைவில் தனது 100 ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் தனது 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருடன் பணியாற்ற முடியாதது வருத்தம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடைசியாக அவர் மோகன்லாலுடன் இணைந்து உருவாக்கிய ஒப்பம் திரைப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் உள்ளார்.