1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (15:49 IST)

மத உணர்வை புண்படுத்தியதாக........ சூப்பர் ஸ்டார் மீது போலீஸில் புகார் !

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தி வரும் குரோர்பதி நிகழ்ச்சியில் இந்து மக்களின் மதவுணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது மஹாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை நடைபெற்ற குரோர்பதி நிகழ்ச்சியில்  மனு ஸ்மிருதி தொடர்பான கேள்விகளை போட்டியாளர்களிடம் எழுப்பினார் நடிகர் அமிதாப் பச்சன்.

அப்போது அவர் கடந்த 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அம்பேத்காரு, அவரது  ஆதரவாளர்களும் எந்த நூலின் நகல்களை எரித்தனர் எனக் கேட்டுவிட்டு, இதற்குப் பதிலளிக்க, விஷ்ணு புராணம், பகவத் கீதை, ரிக்வேதம், மனு ஸ்மிருதி என ஆகிய விருப்பங்கள் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென  பாஜக சட்டமன்ற உறுப்பினர் அபிமன்பு பவார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் இந்து மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாக அமிதாப் பச்சன் மீது புகார் அளிப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை நகலை அவர் பதிவிட்டுள்ளார்..

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது