ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (12:24 IST)

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்த இயக்குனர் பி.வாசு!

எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்த இயக்குனர் பி.வாசு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பணக்காரன், மன்னன், உழைப்பாளி உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு என்பதும் இவர் இயக்கிய சின்னத்தம்பி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இயக்குனர் வாசு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தார். பி.வாசு அவர்களின் மகள் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிவாசு சந்தித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சந்திப்பின்போது பி வாசுவின் மனைவி, மகன் சக்தி மற்றும் மகள் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பி வாசுவின் மகன் திருமணத்திற்கு முதல்வர் உள்பட பல முக்கிய அரசியல்வாதிகளும், ரஜினி, கமல் உள்பட திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது