அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதி! மீண்டும் நெஞ்சுவலியா?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்
இந்த நிலையில் நேற்றிரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஏற்கனவே இருமுறை நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிரத்னம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்ததாக கருதப்பட்டது
ஆனால் மணிரத்னம் அவர்கள் ரெகுலர் பரிசோதனைக்காகவே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்ததாகவும், தற்போது அவர் உடனே அவர் வீடு திரும்பிவிட்டதாகவும், இன்று அவர் வழக்கம்போல் அலுவலகம் சென்று தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவரது பி.ஆர்.ஓ தெரிவித்துள்ளார். மேலும் மணிரத்னம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.