இயக்குனர் லோகேஷ் திடீர் தற்கொலை..! – அதிர்ச்சியில் திரைத்துறையினர்!
பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் 90களில் மிக பிரபலமாக இருந்து வந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று மர்ம தேசம். இந்த தொடரில் வெளியான விடாது கருப்பு என்ற சீரியலில் நடித்தவர் லோகேஷ்.
மேலும் தமிழில் பிரபலமான மற்றொரு குழந்தைகள் சீரியலான ஜீ பூம் பாவிலும் லோகேஷ் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து விட்ட லோகேஷ் தமிழில் வெளியான 6 அத்தியாயங்கள் என்ற ஆந்தாலஜியில் ஒரு எபிசோடை இயக்கியும் உள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷின் மறைவு குறித்து திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.