வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2019 (20:06 IST)

நடிகை மீனாவின் வீட்டை வாங்கினாரா ? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூரி !

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து ந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார். 
பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் வீட்டை சூரி ரூ. 6 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சூரி கூறியுள்ளதாவது :
 
நான் சமீபத்தில் சென்னையில் எந்த சொத்தும் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகை மீனாவில் வீட்டை சூரி வாங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.