திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2019 (21:17 IST)

’அவுங்க தான் ’ என்னோட குருநாதர்கள் - பிரபல நடிகை ’ஓபன் டாக் ’

தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய   காற்று வெளியிடை , செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்தவர்  நடிகை அதிதிராவ். தனது முதல் படத்திலேயே தமிழக ரசிகர்களிடம் பேரன்பைப் பெற்றுவிட்டார்.
தற்போது, அவர், மிஸ்கின் இயக்கியுள்ள சைக்கோ என்ற படத்தில்  நடிகை நித்யா மேனனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் 27 ஆம் தேதி, திரைக்கு வரும் என்று தகவல் வெளியானது.
 
இந்நிலையில்அதிதிராவ் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், நான் இதுவரை பணியாற்றிய அனைத்து இயக்குநர்களுமே எனது குருநாதர்கள். நான் ஒரு படத்தில் நடிக்கும் முன், அந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பதை பார்த்து, அதன்பிறகுதான் என்ன கதாப்பாத்திரம் என கேட்டு அப்படத்தில் ஒப்புக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.