வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

’ தர்பார் ’படம் இணையதளத்தில் வெளியானது : தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி !

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில் தயாராகியுள்ள தர்பார் படம் இன்று வெளியானது. ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளது.
பல்வேறு தரப்பினரும் இந்தப் படம் குறித்து நேர்மறையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட தர்பார் படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
மேலும், ரஜியின் ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியாய் இருப்பதாக இணையதளத்தில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட கூடாது என தயாரிப்பு நிறுவனம் மனு அளித்திருந்த நிலையில், இணையதளத்தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.