வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

தர்பார் சுமாரான படம் தான்... முருகதாஸ் சொதப்பியது எங்கே?

பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்களுக்கு விருந்தை படைத்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளிவரும் நாளே ஒரு பொங்கல் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கல் திருநாளன்று தர்பார் திரைப்படம் வெளிவந்துள்ள ரஜினி ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீடாக் உள்ளது. 
 
தர்பார் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தாலும், ஒரு நார்மல் சினிமா ரசிகனை பொருத்தவரை தர்பார் ஒரு சுமாரான படம் தான். 70 வயதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி டான்ஸ், ஆக்‌ஷன், மாஸ் என கலக்குவது சூப்பர்தான். இதை அனைவரும் வியந்தே பார்க்கலாம். ஆனால், இது ஒன்று மட்டுமே படத்தை தாங்குவது சலிப்பைத்தட்டாதா? 
ரஜினி என்ற ஒருவரை மட்டுமே நம்பி முருகதாஸ் படம் எடுத்தது போல உள்ளது. ரஜினியை தவித்து படத்தில் பேசும் அளவிற்கு இருப்பது நிவேதாவின் நடிப்பு. நயன்தாரா திரையில் வரும் பத்தோடு பதினொன்னாகவே தெரிகின்றார். 
 
இந்த சொதப்பல்கள் அனைத்தையும் ரஜினி ஒற்றை ஆளாய் சரிகட்டினாலும், ழக்கமான ஏஆர் முருகதாஸ் படத்தில் இருக்கும் சுமாரான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்திற்கு ஒரு வீக்னஸாக அமைந்துள்ளது. 
உண்மையில் ரஜினி படம் சூப்பர் என்றாலும், முருகதாஸ் இன்னும் மெனகெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிரது. அதோடு படத்தில் கமிட்டான கலைஞர்களின் இன்னும் வேலை வாங்கியிருக்கலாமோ எனவும் சிந்திக்க தோன்றுகிறது.