செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (00:21 IST)

மாஸ்டர் குழுவினருடன் மீண்டும் இணைய ஆசை !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்கில் வெளியான படம் மாஸ்டர். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது இதுவரை சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் குவிந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: மாஸ்டர் படத்தில் நான் விஜய் என்ற மாஸ் நடிகருடன் நடிக்கப் போகிறேன் என ஆர்வத்தை ஏற்படுத்தியது.  இப்படத்தில், விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் என்ற மிகச்சிறந்த திறமைசாளிகளுடன் பணிபுரிவது சவாலாக இருந்தது.

அடுத்து, மீண்டும் மாஸ்டர் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தன் விருப்பத்தையும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

தனுஷுடன் அடுத்த படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.