வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (19:00 IST)

விஜய் பட காமெடி நடிகரின் விழிப்புணர்வு வீடியோ வைரல்...

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு கொரொனா குறித்த விழிப்புணர்வு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கொரொனா தொற்று ஒரிவரிடம் இருந்து பரவி வருகிறது. தமிழக முதல்வர் தமிழகத்தில் பொது ஊரடங்கு அறிவித்துள்ளது நமது உயிரைக் காப்பாற்ற வேண்டித்தான்.

எனவே அரசு கூறும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வந்தால் கொரொனாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சத்யராஜ் பேசும் வீடியோவும் யோகிபாபு வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.