1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (20:57 IST)

பிரபல நடிகருக்கு ஜோடியான 'தெய்வமகள்' சீரியல் நடிகை

சின்னத்திரை சீரியல்களில் நடித்த பல நடிகைகள் தற்போது பெரிய திரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் 'தெய்வமகள்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை வாணிபோஜன் தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
ஜெய் நடித்த 'ஜரிகண்டி' திரைப்படத்தை அடுத்து நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வைபவ் நடித்து வருகிறார். நெகட்டிவ் போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 'காலா' நாயகி ஈஸ்வரிராவ் ஒருவித்தியாசமான போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் தோன்றுகிறார்.
 
பிரபல இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சார்லஸ் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.