1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (16:32 IST)

தனுஷின் ‘’கர்ணன்’’ பட முதல் சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தைக் குறித்து முக்கிய அப்டேட் தயாரிப்பாளர் தாணு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.

தனுஷ் தனது பகுதி டப்பிங்கை சிறப்பாகப் பேசி முடித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணிகளும், இசையமைப்பாளரின் பின்னணி இசைகோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 

வரும்  2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கர்ணன் படத்தின் முதல் சிங்கில் #KandaaVaraSollunga  என்ற பாடல் நாளை இரவு 8 மணிக்கு ரிலீஸாகும் என்று தெரிவித்து, தனுஷ் ரசிகர்களைத் தயாராக இருக்கும்படி கூறியுள்ளார்.

இதனால், தனுஷ் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். நாளைக்கு சமூக வலைதளத்தில் டிரெண்டிங் செய்ய இன்றே யோசித்து வருகின்றனர்.