திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (22:05 IST)

#தனுஷ்_தசாப்தம்ஆரம்பம் ரசிகர்கள் புதிய ரெக்கார்ட் முயற்சி!

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ரிலீஸ்ன் போது, புதிய ரெக்கார்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் குறைந்த நேர்த்தில் அதிக ரீவீட் செய் தற்போது டுவிட்டரில் #தனுஷ்_தசாப்தம்ஆரம்பம் என ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் 40-வது படமான ’’ஜகமே தந்திரம்’’ படத்தின் இரண்டாவது பாடல் வரும் தீபாவளி அன்று ரிலீசாகி பெரும் வைரலானது.

தற்போது நடிகர் தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை நிகழ்த்த டுவிட்டரில் #தனுஷ்_தசாப்தம்ஆரம்பம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங்செய்து வருகின்றனர்.  

இதில், இதில் தனுஷிற்கு 2021 ஆம் ஆண்டில் சிறப்பான தொடக்கம் இருக்க வேண்டுமென்பதற்காக ஜகமே தந்திரம் படத்தில் டிரைலர் ரிலீஸாகும்போது டுவிட்டரில் 100K லைக்குகள் பெற வேண்டுமென சாதனை படைக்க வேண்டுமெனவும் கூறி டுவிட்டரில் டிரெண்டிங்  செய்து வருகின்றனர்.