போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் கொடுத்து மோதவிட்ட பிக்பாஸ் - ப்ரொமோ வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி வரும் நாட்களில் போட்டிகள் கடிமையாக இருக்கும் என கமல்ஹாசன் கூறியிருந்தார். மேலும் பாசத்தை ஒருபுறம் வைத்து விட்டு போட்டியை போட்டியாக பாருங்கள் என அறிவுறித்தியிருந்தார். அதேபோல்தான் நாட்கள் குறைவாக உள்ள நிலையில் டாஸ்க்கும் கடினமாக கொடுக்கிறார்.
இந்நிலையில் புதிதாக வந்த புரொமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்ய வேண்டும் என்பதான் டாஸ்க்.
இத்னை தொடர்ந்து கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷிடம் கட்டிபிடி வைத்தியதில் யாரு பிஎச்டி செய்திருப்பது, சிநேகன் வெளியில் போனதும் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். வையாபுரி ஆரவ்வை கலாய்க்கிறார். பேரு தான் ஆரவா இல்லை ஆறு லவ்வா என்று வையாபுரி ஆரவை கிண்டல் செய்கிறார். கணேஷ் நிறைய முட்டை சாப்பிடுவதை கிண்டல் செய்கிறார் சுஜா. அதற்கு கணேஷ் வெங்கட்ராம் நான் என்ன உங்க சொத்தை வித்தா நான் முட்டை சாப்பிடுகிறேன் என்று கேட்கிறார்.