Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை கதறவைத்த பிக்பாஸ்

Sasikala| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:35 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. சாணக்கழிவுகளும் அழுகிய கத்தரிக்காய்களும்  நிறைந்திருக்கும் கண்ணாடி பெட்டியில் மூன்று வாஷர்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தது.துண்டுச்சீட்டில் வரும் கேள்வியை போட்டியாளர்கள் தங்களுக்குள் கலந்தோசித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் சென்று கழிவுகளுக்குள் கையை விட்டு வாஷரை தேடி எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். இது டாஸ்க் என்பதை விட பிளாக்மெயில் என்றுதான் சொல்லவேண்டும். இதில் பெட் ரூம் மூடப்பட்டு, தண்ணீர், கிச்சன் கேஸ்  என்று எல்லாம் நிறுத்தப்படுமாம். இந்தச் சவாலை முடித்தால்தான் அவை திறக்கப்படுமாம்.
 
டாஸ்க் ஆரம்பித்து முதல் கேள்வியாக, வீட்டை விட்டு இப்போதே வெளியேற பணம் கிடைத்தால் யார் அதைச் செய்வார்கள்? போட்டியாளர்கள் கூடிப்பேசி ஆரவ்வை தேர்ந்தெடுத்தார்கள். அவர் சென்று கழிவில் கைவிட்டு சில நிமிடங்களில் வாஷரை  தேடி எடுத்து விட்டார்.
 
இரண்டாவது கேள்வி ‘இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களில் ஒருவர் வெற்றி பெறக்கூடாது என்று நீங்கள் நினைப்பவர் யார்?’ இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹரிஷ். ஆனால் இவருக்கு நீண்ட நேரமாக தேடி, பிறகு ஒருவழியாக வாஷரை  கண்டுபிடித்தார்.
 
மூன்றாவது கேள்வி வெற்றிக்காக தன் உயிர் நண்பனை குத்தக்கூட தயங்காத நபர் யார்? இதற்கு சுஜாவை எல்லோரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்கள். அவர் தேடிய சில நொடிகளிலேயே வாஷர் கிடைத்து விட்டது. வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் கடிமையாக்கப்படுமோ என்ற பயத்தில் போட்டியாளர்கள் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :