ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (20:43 IST)

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் நோட்டீஸ்

online
தமிழக சிபிசிஐடி போலீஸார்  ஆன்லைன் சூதாட்ட  நிறுவனங்களுக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இதில் விளையாடி பலர் தங்களின்  பணத்தை  இழந்து வருவதோடு பல தற்கொலைகள் நிகழ்ந்து வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டுமென பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவாகியுள்ள  17 வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக பிரபல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களான டிரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி, ஆகிய 6 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு  சிபிசிஐடி     நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகிறது.