சற்றுமுன் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த தெலுங்கானா போலீஸ்! கைதாகும் வனிதா?

Last Updated: புதன், 3 ஜூலை 2019 (12:24 IST)
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவரும் சொர்ணாக்கா வனிதா குழந்தை கடத்தல் வழகில் விரைவில் கைதாக போவதாக பரபரப்பு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 
கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மகளும் பிறந்தனர். பின்னர் இருக்காருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  2005ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர். அதன் பின்னர் மறுபடியும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆனந்த்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆனந்த்ராஜுடன் ஜெனிதா என்ற மகள் பிறந்தார். 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதனை அடுத்து மூன்றவதாக நடன இயக்குனர் ராபர்ட்டை திருமணம் செய்துள்ளார்.
 
இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ்  - வனிதாவுக்கும் பிறந்த மகள் ஜெனிதா  தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார். இந்த சூழலில் மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி 6ஆம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் இதுவரை ஜெனிதாவை தந்தையிடம் திருப்பி அனுப்பவில்லை. மேலும் அவர் குறித்த தகவல்களையும் ஆனந்தராஜ்க்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 
 
இதனால் விரக்தி அடைந்த ஆனந்த்ராஜ்  தந்து மகளை கடத்தி சென்று விட்டதாக  தெலுங்கானா  போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.  இதையடுத்து வனிதா மீது ஆள் கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது. 

 
இந்த நிலையில் வனிதாவிடம் இந்த வழக்கு குறித்து விசாரிக்க தெலுங்கானா போலீசார் தமிழகம் வந்துள்ளனர். பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பூந்தமல்லி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்குள் நசரத்பேட்டை போலீசார் உதவியுடன் தெலுங்கானா போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, வனிதா கூடியவிரைவில் கைது செய்யபடவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :