உனக்கு அறிவு இருக்கா? மீராவிடம் எகிறிய கவின்- ப்ரோமோ!

Last Updated: செவ்வாய், 2 ஜூலை 2019 (14:20 IST)
பிக்பாஸ் 3சீசன் ஆரம்பித்து சண்டை சர்ச்சரவுகளால் ஸ்வாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்தவகையில் அடுத்ததாக வந்துள்ள ப்ரோமோ வீடியோவில் கவின் மற்றும் மீரா மிதுனுக்கும் இடையில் சண்டை வலுக்கிறது. 


 
இந்த ப்ரோமோ வீடியோவில் கவின் நேரடியாக மீரா மிதுனுடன் சண்டையிடுகிறார். அதாவது பிக்பாஸ் ரூல்ஸ் படி நடக்கவில்லை என கவின் மீரா மிதுனை திட்டுகிறார். இருவருக்கும் இடையில் இதனால் ஆர்க்யூமென்ட் அதிகமாக ஒருகட்டத்தில் மாறிமாறி திட்டிக்கொள்கின்றனர்.
 
கூட கூட எதிர்த்து பேசிய மீராமிதுனால் செம்ம கடுப்பான கவின்  "அறிவில்ல, போய் ரூல்ஸ படி என மீரா மிதுனை திட்டினார். மேலும் உன்னிடம் சும்மா வந்து யாரும் பிரச்னை செய்யவில்லை அப்படி யாரும் ஆசை படவுமில்லை என கோபமாக பேசினார். 
 
ஆனால் மீராமிதுன் கடுமையான வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை. அப்படியிருந்தும் இதனை கேட்ட மோகன் வைத்யா, கவினை கண்டிக்காமல் மீராவை அமைதியாக இருக்கும்படியும் வயசுக்கு மரியாதை கொடு என்றும் அதட்டுகிறார். இதனை பார்க்கும்போதே பார்வையாளர்களுக்கு கடுப்பாகிறது. 
 
 


இதில் மேலும் படிக்கவும் :