திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 7 டிசம்பர் 2018 (18:53 IST)

ஹீரோவானார் பிக்பாஸ் ஷாரிக்! கதாநாயகி யாருன்னு பாருங்க..!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட பலர் திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகின்றனர். குறிப்பாக ஆண் அழகன் ஹாரிஸ் கல்யாண், ஆரவ், மகத், ஐஸ்வர்யா  தத்தா , யாஷிகா, ஜூலி என இதில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களும் தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக்கொண்டனர்.


 
அந்த வகையில் தற்போது இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஷாரிக். இவர் பிரபல நடிகர்களான உமா மற்றும் ரியாஸ்கான் நட்சத்திர தம்பதிகளின் மகன்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் அனைவராலும் பரவலாக அறியப்பட்டாலும், இவர் அறிமுகமாகியது வில்லன் கதாப்பாத்திரத்தில் தான் . நடிகர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த 'பென்சில்' படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு இளம் வில்லன் என்கிற பெயரை பெற்று தந்தது.


 
ஆனால் தொடர்ந்து, இதே போன்ற கதாப்பாத்திரம் கிடைத்ததால், மற்ற படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி எதிர்ப்பாராத நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
 
இந்நிலையில் அவர் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.அவர் நடிக்கவுள்ள படத்தின் பெயர் 'உக்ரம்' என்றும் இந்த படத்தை 'அட்டு' படத்தை இயக்கிய ரத்தின்லிங்கா  இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
ஷாரிக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா  அறிமுகமாகிறார்.


 
சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. துரை கே.சி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட், இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.