1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (15:07 IST)

விமான பணிப்பெண்ணாக மாறிய பிக்பாஸ் பாலாஜியின் மனைவி நித்யா!

வாலி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் காமெடியனாக நடித்தவர் தாடி பாலாஜி. அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். 
 
கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. ஒரு சில வாரங்களே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார் நித்யா. தினமும் காலையில் குட்மார்னிங் சொன்னது மூலம் அவரது மகள் போஷிகாவும் பிரபலமானார். 
 
பிறகு நித்யா வந்த சிலவாரங்களிலேயே வெளியேற பாலாஜி கடைசிக்கு முன் வரை இருந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சியால் இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்கள்.
 
நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு , அவரது சமூகவலைதளப் பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமூகவலைதளப் பக்கங்களில் நித்யா வெளியிடும் பதிவுகள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது. 
 
அந்தவகையில் அண்மையில் நித்யாவும் அவரின் மகள் போஷிகாவும் தங்கள் தலை முடியை கத்தரித்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக தானம் செய்தார்கள்.
 
இந்நிலையில் தற்போது நித்யா நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு விமானி பெண் கெட்டப்பில் மிகும் அழகாக இருக்கிறார். 
 
இதில் அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் விமான பணிப்பெண்ணாக மாறிவிட்டாரா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.