திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (12:53 IST)

விரைவில் தொடங்குகிறது பிக்பாஸ் 6…. தொகுப்பாளர் யார்?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சில எபிசோட்களை தொகுத்து வழங்கிய அவர் விக்ரம் ஷூட்டிங் காரணமாக பின்னர் விலகினார்.

தற்பொது விக்ரம் திரைப்படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 6 ஆவது சீசனுக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதிலும் கமலே தொகுப்பாளராக பணியாற்றுவார் எனவும் சொல்லப்படுகிறது.