திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (12:55 IST)

பிக்பாஸ் சம்யுக்தா சன் டிவி சீரியல் நடிகையா..!! ஒவ்வொண்ணா கசியும் ரகசியம்!

பிக்பாஸ் வீட்டில் நுழையும் பெரும்பாலானோர் இதற்கு முன்னர் பிரபலமாக இல்லை என்றாலும் அவர் யார்? இதற்கு முன்னர் என்ன செய்துக்கொண்டிருந்தார்? என்ன பிடிக்கும்? எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது? என்பது குறித்து மொத்த விவரத்தையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள் நெட்டிசன்ஸ்.

அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்திருக்கும் சம்யுக்தா கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் பார்வையில் தென்பட துவங்கியுள்ளார். மாடல் அழகியான இவர் கடந்த  2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் ஜெயித்துள்ளார்.


நடிகையும் முன்னாள் போட்டியாளருமான ஐஸ்வர்யா தத்தா சம்யுக்தா குறித்து ட்விட் செய்துள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் துர்கா என்ற கதாபத்திரத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் பிரபல தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழியும்ஆவார். அவருடன் சேர்ந்து நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியது. பாவனாவின் சிபாரிசில் தான் சம்யுக்தாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பே கிடைத்தது என ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.