1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 நவம்பர் 2020 (11:52 IST)

பலருக்கும் அவர் நல்லவர்.. ஆனால் எனக்கு – கமல் பிறந்தநாளில் வைரமுத்து வாழ்த்து!

நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் 68 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு பாடலாசிரியர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமா உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிவரும் கமல் சமீபகாலமாக அரசியல் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் இன்று அவரின் 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சக கலைஞர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கமலின் நெருங்கிய நண்பரான வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.

தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!’ எனக் கூறியுள்ளார்.