வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (12:41 IST)

"தவளை குஞ்சு தானா வந்து எவிக்ட்ல மாட்டுது" - இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. வனிதாவின் ஆட்டம் ஆட ஆரம்பித்ததிலிருந்து பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியார்களின் உண்மை முகங்ககள் வெளிச்சத்துக்கு வர துவங்கியுள்ளது. 


 
சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் மதுமிதா கவினிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். "உங்களை மாதிரி 4 பெண்களை யூஸ் பண்ணிட்டு உள்ள இருக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்று கூறி ஓவராக சவுண்டு விட்டு எகுறுகிறார் மதுமிதா. 
 
இதனால் கடுப்பான லொஸ்லியா, "அவங்க மீது தப்பு என்றால் மக்கள் வெளியில் அனுப்புவாங்க..நீங்க அந்த கதையை எடுத்து கதைக்கவேண்டிய அவசியம் இல்லை அதில் நானும் சம்மந்தப்பட்டிருக்கிறேன் தயவுசெய்து கதைக்கவேண்டாம்" என்று கூறிவிட்டு கடுப்பாகி அங்கிருந்து வெளியேறுகிறார். வனிதாவின் கண்ணில் சிக்கிய மதுமிதா ஓவராக சவுண்டு விட்டு சீன போடுவதால் இந்த வாரம் நிச்சயம் வெளியேறுவதற்கு நிறை வாய்ப்புள்ளது. 
 
வீட்டில் இவ்வளவு சண்டை நடந்துகொண்டிருக்கும் போது சேரன் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் கூலாக உட்கார்ந்து வெங்காயத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்.