திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (09:45 IST)

”திரை தீ பிடித்ததா?”… கலவையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் பீஸ்ட்!

இன்று காலை வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

பீஸ்ட் முதல் நாள் முதல் காட்சி…

இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு திரையரங்குகளில் குவிந்தனர். திரை அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் கொண்டாட்டங்கள் நடந்து சிறப்புக் காட்சிகள் தொடங்கின. பெரும்பாலான ஊர்களில் சிறப்புக் காட்சிகள் முடிந்து ரசிகர்களின் கருத்துகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

திரை தீ பிடித்ததா?

இந்நிலையில் சமூகவலைதளங்களில் பீஸ்ட் திரைப்படம் பற்றி இருவேறு கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு தரப்பினார் “ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து தள்ள மற்றொரு தரப்பினரோ ‘படம் சுத்தமாக சரியில்லை” என்று கூறி வருகின்றனர். ஒரு காட்சிதான் முடிந்திருக்கிறது என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் இன்னும் துல்லியமான விமர்சனங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.