கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்கு தடை விதித்ததா பங்களாதேஷ்?
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். மேலும் அவரே ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சென்சாரில் இந்த படம் சிக்கி சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதன் பின்னர்தான் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றது. தற்போது பல கட்டத் தாமதங்களுக்குப் பிறகு படம் ஜனவரி 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கு பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அரசுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரிசல்தான் இந்த தடைக்குக் காரணமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.