திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (21:04 IST)

திருக்குறளை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாலா!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பாலா!
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பு வரை திமுகவையும் முக ஸ்டாலின் அவர்களையும் கண்டுகொள்ளாத திரையுலகம் தற்போது அவர் வெற்றி பெற்று முதல்வர் ஆனவுடன் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அந்த வகையில் கடைசியாக தற்போது இயக்குனர் பாலா அவர்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல் செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம் நன்றிகள் என்று கூறியுள்ளார்.
 
மேலும் இயக்குனர் பாலா
 
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
 
என்ற திருக்குறளையும் பதிவு செய்துள்ளார். பாலாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது