1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 2 மே 2017 (21:43 IST)

பாகுபலி சேலை விற்பனை; ஆர்வமுடன் வாங்கும் பெண்கள்

பிரபாஸ், அனுஷ்கா படம் போட்ட பாகுபலி சேலை சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


 

 
கடந்த வாரம் வெளியான பாகுபலி 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா புகைப்படத்துடன் சேலை விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களிடையே பெரிய எதிர்பார்பை உண்டாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சேலையை வாங்குவதக்கு பெண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பிரபாஸ், அனுஷ்கா இல்லாமல் படத்தில் அனுஷ்கா உடுத்தியது பொன்ற சேலை பாகுபலி சேலை என்ற பெயரில் விறபனைக்கு வந்திருந்தால் இன்னும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும்.
 
இதுமாதிரி புகைப்படம் உள்ள சேலையை பெரும்பாலன பெண்கள் விரும்ப மாட்டார்கள். இருந்து சிலர் இந்த சேலையுடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.