பாலிவுட்டில் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கேட்கும் இயக்குனர் அட்லி!
இயக்குனர் அட்லி நயன்தாராவுக்கு பாலிவுட்டில் உள்ள முன்னணி ஏஜென்ஸி நிறுவனங்களிடம் வாய்ப்புகள் கேட்டு வருகிறாராம்.
நயன்தாரா சினிமாவில் இருந்து விலகலாம் என 2012 ஆம் ஆண்டு முடிவு செய்து மும்பையிலேயே செட்டில் ஆகி இருந்தார். அப்போது அவரை மறுபடியும் சினிமாவுக்கு தன்னுடைய ராஜா ராணி படத்தின் மூலம் அழைத்து வந்தார். அப்போது இருந்தே அட்லிக்கு நயன்தாரா மேல் பாசமும் அன்பும் இருந்து வருகிறது.
அந்த பாசத்தின் அடிப்படையில்தான் பாலிவுட்டில் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததும், அந்த படத்தில் நயன்தாராவைக் கதாநாயகியாக்கியுள்ளார். இதுமட்டுமில்லாமல் இப்போது மும்பையிலேயே தங்கி இருக்கும் அட்லி பல முன்னணி நடிகர் நடிகைகள் ஏஜென்ஸியிடம் நயன்தாராவுக்காக வாய்ப்புகள் கேட்டு வருகிறாராம். இதனால் பல படங்களுக்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.