திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (10:32 IST)

அடுத்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்காது! – அமைச்சர் அறிவிப்பு!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால் அடுத்த சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 19ம் தேதி சனிக்கிழமையன்று தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினம் நடக்க இருந்த கொரோனா தடுப்பூசி முகாம் நடக்காது என மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.